சி.ஐ.டி.யினர் எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது.



மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில், சி.ஐ.டி.யினர் எனக் கூறி 
வீடொன்றில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட கும்பலொன்றை பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.



ஜனவரி 5 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் சி.ஐ.டி. என தெரிவித்து கொள்ளையர்கள் குறித்த வீட்டில் புகுந்ததுடன், அங்கிலிருந்த பெண் ஒருவரை கட்டிவைத்து, அவரின் காதில் இருந்த தோடு, தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் சந்தேக நபர்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டே மட்டக்களப்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் மேலும் நால்வரை கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 31,34,29,31 வயதுகளையுடைய ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடிப்பதற்காகன திட்டங்களை வகுத்து, வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கடந்த 5 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் குறித்த வீட்டினுள் பொலிஸ் சி.ஐ.டி. என தெரிவித்து உள் நுழைந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொள்ளையடித்த தங்க ஆபரண நிதி நிதிறுவனம் ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதுடன், கொள்ளைக்கு பயன்படுத்திய வாடைக்கார் ஒன்றும், 3 கையடக்க தொலைபேசி, கத்தி கோடரி என்பவற்றை பொலிஸஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சி.ஐ.டி.யினர் எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது. சி.ஐ.டி.யினர்  எனக் கூறி வீட்டுகளில் புகுந்து தங்க நகை கொள்ளையாடிக்கும் கும்பல் சிக்கியது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.