பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என தீர்மானம்.



பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என இலங்கை
மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 1.3 ட்ரில்லியன் (130,000 கோடி) ரூபாய் பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் அதிகளவில் பணத்தை அச்சிட்டு வந்தமையே பண வீக்கம் அதிகரிக்க காரணம் என பல தரப்பினர் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இதனிடையே அடுத்த மாதத்துக்குள் வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கம் அண்மையில் அறிவித்த நிவாரணப் பொதியை வழங்க 230 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதுடன் அந்த பணத்தில் ஒரு தொகை தேசிய பணச் சந்தையில் பெற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் : புதிது
பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என தீர்மானம். பணத்தை தொடர்ந்தும் அச்சிடுவதில்லை என  தீர்மானம். Reviewed by Madawala News on January 09, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.