நாட்டின் கடன் மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம்.



நாட்டின் கடன்
மறுசீரமைப்பு
நோக்கங்களுக்கான 
தேவை ஏற்படும் பட்சத்தில்,
சீனாவிடமிருந்து புதிய
கடனைக் கோரியுள்ளதாக
மத்திய வங்கியின் ஆளுநர்
அஜித் நிவார்ட் கப்ரால்
தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர்
மேற்குறிப்பிட்ட விடயத்தைத்
தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த
அவர், இலங்கைக்கும்
சீனாவுக்கும் நல்ல
பரஸ்பர புரிந்துணர்வு
உள்ளது. மறுசீரமைப்பு
நோக்கங்களுக்காக
நாங்கள் சீனாவிடம் கடன்
கோரியுள்ளோம். சீனா
எமக்கு வழங்கும் உதவிகளை
நாங்கள் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி
மற்றும் பிற நோக்கங்களுக்காக
நாம் இந்தக் கடனைப்
பெறலாம் என்றும் நாங்கள்
ஏற்கெனவே சீனா மற்றும்
இந்தியாவுடனும் பெரிய
அளவில் வர்த்தகம் செய்து
வருகிறோம் என்றும் கப்ரால் கூறினார்.


தற்போது, 1 பில்லியன் டொலர் நிவாரணம் பெற
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டு வருவதாக அவர்
சுட்டிக்காட்டினார்.



இந்த விடயங்கள் நடக்கும்
போது, எங்களிடையே
பகிர்ந்து கொள்ளப்படும்
வர்த்தகப் பிணைப்புகள்
அதிகரிக்கும். மேலும், இந்த
நாடுகளுக்கிடையிலான
உற்பத்தித்திறன் மற்றும்
இருதரப்பு உறவுகளை
வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.


மேலும், சீனாவால்
விவாதிக்கப்பட்டு
வழங்கப்படும் தொகை
இன்னும் இறுதி
செய்யப்படவில்லை என்றும்,
உரிய நேரத்தில் அறிவிப்பு
வெளியிடப்படும் என்றும்
ஆளுநர் கப்ரால் குறிப்பிட்டார      
நாட்டின் கடன் மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம். நாட்டின் கடன் மறுசீரமைப்பு  நோக்கங்களுக்காக சீனாவிடமிருந்து புதிய கடனைக் கோரியுள்ளோம். Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.