கொழும்பு துறைமுக நகரில் 'செல்ஃபி' எடுப்பதற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை.



கொழும்பு துறைமுக நகரில் 'செல்ஃபி' எடுப்பதற்கும்,
 தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்பி படங்களை எடுப்பதற்கும், காணொளிகளைப் பதிவு செய்வதற்குக் கொழும்புத் துறைமுக நிறுவனம் கட்டணம் அறவிடுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொழும்புத் துறைமுக நகர பகுதியில், விழாக்கள் மற்றும் வணிக ரீதியில் பதிவு செய்யப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனிப்பட்ட நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், வணிக விளம்பரங்கள் ஆகியனவற்றுக்காக எடுக்கப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புத் துறைமுக நகர திட்ட நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
கொழும்பு துறைமுக நகரில் 'செல்ஃபி' எடுப்பதற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை. கொழும்பு துறைமுக நகரில் 'செல்ஃபி'  எடுப்பதற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை. Reviewed by Madawala News on January 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.