நுவரெலியா சென்றவர் சடலமாக மீட்புநுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 
"டேப்பன்டைல்" வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
இவர் வர்த்தகர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த நபர் பயணித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்
நுவரெலியா சென்றவர் சடலமாக மீட்பு நுவரெலியா சென்றவர்  சடலமாக மீட்பு Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.