8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கல்முனை காணி பதிவகம் இழுத்து மூடப்பட்டது.



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

8 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் இனங்காணப்பட்டதை

அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி மறுஅறிவித்தல் மூடப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.



சுமார் 31 உத்தியோகத்தர்களிடம்  இன்று(13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3 ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கல்முனை காணி பதிவகம் இழுத்து மூடப்பட்டது. 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கல்முனை காணி பதிவகம் இழுத்து மூடப்பட்டது. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.