நாடு செலுத்த வேண்டிய கடன் 4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது... கடனை எப்படி செலுத்த போகிறோம் என்பதை நிதியமைச்சர் கூற வேண்டும் .

 


இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கடன் நான்கு பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது எனவும்

நாட்டின் கடனை எப்படி செலுத்த போகிறோம் என்பதை நிதியமைச்சர் கூற வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


நாட்டின் தேசிய மொத்த உற்பத்தி வருமானத்தை எடுத்துக்கொண்டால், 10 வீதமாக குறைந்துள்ளது. அந்நிய செலாவணியில் அடுத்த ஆண்டு ஆறு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடன் ஆறு பில்லியன் டொலர்களாக இருக்கின்றது.


வருடந்தோறும் இந்த கடனை செலுத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த கடனை செலுத்தும் விதத்தை நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு கூற வேண்டும்.


அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல போகிறதா?. ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழியை முன்வைக்க முடியுமா என்பதை நிதியமைச்சர் பெப்ரவரி மாதம் கூற வேண்டும்.


இந்த பிரச்சினையை மிதப்பதற்கு இடமளிக்காது, சரியான மாற்று வழியை முன்வைக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

நாடு செலுத்த வேண்டிய கடன் 4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது... கடனை எப்படி செலுத்த போகிறோம் என்பதை நிதியமைச்சர் கூற வேண்டும் . நாடு செலுத்த வேண்டிய  கடன் 4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது... கடனை எப்படி செலுத்த போகிறோம் என்பதை நிதியமைச்சர் கூற வேண்டும் . Reviewed by Madawala News on January 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.