வர்த்தக அமைச்சரிடம் இருந்து 3,998 ரூபாவுக்கு 20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி இன்றுமுதல் சதோச வர்த்தக நிலையங்களில் ..

 


சதோச வர்த்தக நிலையங்களில்  ரூ. 3,998 க்கு  20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி   

கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்று வர்த்தக அமைச்சர்   பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.


அதன்படி, இன்று (ஜன. 14) இருந்து இந்த  விலையில் இவை கிடைக்கும் என  இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தநிவாரண பொதியில்   சம்பா கிலோ 10 கிலோ, 

வெள்ளை சீனி ஒரு கிலோ,  சிவப்பு பருப்பு ஒரு கிலோ  இடியாப்ப மாவு ஒரு  கிலோ, நெத்தலி  500 கிராம் , நூட்ல்ஸ்  400 கிராம் ,   உப்பு 400 கிராம் ,  மசாலா தூள்  100 கிராம் , மஞ்சள் 100 கிராம்  ,தேயிலை 100 கிராம்,  வாசனை சவர்காரம் ஒரு கட்டி , சதோச சந்தன சவர்காரம் 1 , கை  கழுவும் திரவ  100ml, சோயாமீட் க்ரீன் 90கி,  சதோச துணி துவைக்கும் சவர்காரம் , பப் படம் பேக்கேட் மற்றும் 10 முகக்கவசம் என்பன குறிப்பிட்ட பொதியில் உள்ளடக்கம்.


குறிப்பிட்டுள்ள விற்பனைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப, மற்ற சூப்பர் மார்கெட்சல்களில் உள்ள இப் பொருட்களை கொள்வனவு செய்யும்  போது ரூ. 6,521 செலவாகும் ஆனால் சதொச விற்பனை நிலையத்தில் நாம் 3,998 ரூபாவுக்கு மாத்திரமே வழங்கிறோம்.

பொதுமக்கள் 1750 ரூபா வரை சேமிக்கலாம் என வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சரிடம் இருந்து 3,998 ரூபாவுக்கு 20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி இன்றுமுதல் சதோச வர்த்தக நிலையங்களில் .. வர்த்தக அமைச்சரிடம் இருந்து   3,998 ரூபாவுக்கு  20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி இன்றுமுதல்  சதோச வர்த்தக நிலையங்களில்  .. Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.