இன்றைய இறுதி பட்ஜெட் வாக்கெடுப்பிலும் ஹக்கீம் & ரிஷாதின் கட்சி MPக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்காளிப்பார்களா?



வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெறவுள்ளது.


கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் எதிர் தரப்பு மு.க மற்றும் அ.இ.ம.க MP க்கள் அவ்விரு கட்சிகளின் முடிவுகளையும் மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பித்தக்கதாகும்.


வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து வாக்களித்த மு.க எம்.பிக்களை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்தார்.


இதே வேலை அரசை ஆதரித்த தம் கட்சி எம்.பி க்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து இடை நிறுத்துவதாக அ.இ.ம.க தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அறிவிப்பு விடுத்தார்.


இந்நிலையிலேயே பஜ்ஜட் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பிலும் மு.க மற்றும் அஇமக எம்.பி க்கள் அரசை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

மு.க எம்.பி க்களான ஹரீஸ், ஹாபிஸ் நஸீர், பைசல் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோரும் அ.இமக எம்.பி க்களான முஷர்ரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகிய எம்.பி க்களுமே இன்றைய பஜ்ஜட் இறுதி வாக்கெடுப்பிலும் அரசை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மு.க தலைவர் ஹக்கீம் மற்றும் அஇமக தலைவர் ரிஷாத் ஆகியோர் அரசை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

முஸ்லிம் கட்சிகள் தொடர்ந்தும் நிலையற்ற முடிவுகளில் சிக்கித் தவிப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக தலைவர்கள் எடுக்கும் எந்த முடிவுகளையும் அவர்களின் எம்.பிக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுவதும் பின்னர் அவர்களை மன்னித்து விட்டோம் என அறிவித்து பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைப்பதும் இவர்களின் வாடிக்கையான பணியாக மாறியுள்ளமையினால் பொது மக்கள் மத்தியில் முஸ்லிம் எம்.பி க்கள் பற்றிய பெரும் அவநம்பிக்கையை உண்டாக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இன்றைய இறுதி பட்ஜெட் வாக்கெடுப்பிலும் ஹக்கீம் & ரிஷாதின் கட்சி MPக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்காளிப்பார்களா? இன்றைய இறுதி பட்ஜெட் வாக்கெடுப்பிலும் ஹக்கீம் & ரிஷாதின் கட்சி MPக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்காளிப்பார்களா? Reviewed by Madawala News on December 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.