கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் படகு விபத்தில் பாதிக்கபட்ட சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையைத் தோற்றுவிக்க உளவள நிகழ்ச்சி.
ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் படகுப் பாதையில் 23.11.2021 அன்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மனநிலையைத்
தேற்றுவித்தல் (மகிழ்ச்சியை ஏற்படுத்தல்) உளவளத்துனை சம்பந்தமான நிகழ்ச்சி(08) கிண்ணியா பிரதேச செயக சிறுவர் பிரிவு மற்றும் கலாசாரப் பிரிவு இணைந்து கிண்ணியா அல்அஸ்ஹர் வித்தியாலத்தில் நடைபெற்றது.
குறித்த இப் பாடசாலையில் கல்வி கற்ற நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள் மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களும் இப்பாடசாலையினை சேர்ந்தவர்களே இப் படகு விபத்தின் பின் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதுடன் மாணவர்களை மகிழ்வூட்டும் செயற்பாடாக இவ் உளவளத் துணை செயற்பாடுகள் வழங்கப்பட்டது.
இதில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன. குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,வைத்தியர் மாசாத்,உளசமூக உத்தியோகத்தர் சம்சீத் ,ஆசிரிய பயிற்சி வளாகத்தின் உளவளத்துணை பிரிவு ஆசிரியர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments: