“ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் ஜே.வி.பிக்கு கிடையாது ; மடவளை நகரில் JVP தெரிவிப்பு


சிதைந்து போன நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கம் அல்ல. நல்லதொரு நாட்டை உருவாக்குவதே

எமது நோக்கமாகுமென ஜே.வி. பியின் உயர் அரசியல் பீட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்கா தெரிவித்தார். நேற்று  மடவளை நகரில் நடைபெற்ற ‘கிராமத்திலிருந்து’ என்ற வேலைத் திட்டத்தை பாத்ததும்பரைத் தொகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின் போதே இதனைத் தெரிவித்தார். 


தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கா தெரிவிக்கையில்: ஊடகங்களுக்கு முன் தோன்றி வீர வசனம் பேசி, அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து மக்களை உசார்படுத்தியவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்களது இரட்டை வேடம் வெளிவந்துள்ளது என்றார். இப்பிரச்சார நிகழவின்போது கலந்து கொண்ட ஜே.வி. பியின் உயர் அரசியல் பீட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தவும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துகளை வெளிட்டார்.

“ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் ஜே.வி.பிக்கு கிடையாது ; மடவளை நகரில் JVP தெரிவிப்பு “ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் ஜே.வி.பிக்கு கிடையாது ; மடவளை நகரில்  JVP தெரிவிப்பு Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.