வைத்தியர்களான ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர் கௌரவிப்பு.பைஷல் இஸ்மாயில் -

கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சேவை காலத்தைப் பூர்த்தி செய்து பிரியா

விடை பெற்றுச்செல்லும் வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாகினால் விடைபெற்றுச் செல்லும் வைத்தியர்களான திருமதி ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் பீடாதிபதி முஹம்மட் ஜாபர், காரைதீவு மருந்தக வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி.எம்.ஹாலித் உள்ளிட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

வைத்தியர்களான ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர் கௌரவிப்பு. வைத்தியர்களான ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர் கௌரவிப்பு. Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.