குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; சிகிச்சை பெற்று வந்த இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் வீடு திரும்பினர்.

 


திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று (23) இடம்பெற்ற அனர்த்தத்தில்

மீட்கப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் இன்று (24) மதியம் சிகிச்சையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஜிப்ரி தெரிவித்தார்.

இதில் இரு சிறுவர்களும் நான்கு ஆண்களும் அடங்குவர்.

படகுப்பாதை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் மற்றுமொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தனர் தற்போது ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மேலும் தெரிவித்தார்.


இன்றைய தினம் (24) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு விஜயம் செய்து படகு விபத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை நலன் விசாரித்து பின், "இந்த படகு விபத்து சம்பவம் பெரும் கவலையளிக்கிறது குறிஞ்சாக்கேணி பால விடயத்துடன் சம்மந்தப்பட்ட இதன் பின்புலத்தில் உள்ளவர்களை தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; சிகிச்சை பெற்று வந்த இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் வீடு திரும்பினர். குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; சிகிச்சை பெற்று வந்த  இரு சிறுவர்கள் உட்பட  ஆறு பேர் வீடு திரும்பினர். Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.