காணாமல் போயுள்ள மூன்று சிறுமியர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கப்பித்துள்ளோம் ; பொலிஸார் தெரிவிப்பு.கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியர்கள் மூவர்
 காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸாா் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

13 தொடக்கம் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுமியர் மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என்பதுடன் ஒரு சிறுமி அவர்களின் உறவுக்கார சகோதரி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மூன்று சிறுமியர்களும் காணாமல் போயுள்ளதாக நேற்று (08) முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதுதொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பான பரந்துப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றத்துக்கு பொலிஸாா் அறிவித்துள்ளனா்.
காணாமல் போயுள்ள மூன்று சிறுமியர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கப்பித்துள்ளோம் ; பொலிஸார் தெரிவிப்பு. காணாமல் போயுள்ள மூன்று சிறுமியர்கள்  தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கப்பித்துள்ளோம் ; பொலிஸார் தெரிவிப்பு. Reviewed by Madawala News on November 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.