செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர், புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சோகம். #இலங்கைசெல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதி
உயிரிழந்த சம்பவமொன்று வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி – மன்னார் வீதி கல்லாறுப்பாலத்தில் இன்று காலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் முருங்கன் பகுதியிலிருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், செட்டிக்குளம் கல்லாறுப்பாலத்தின் மீது ஏறி தங்களது கையடக்க தொலைபேசியில் செல்பி படமெடுக்க முயன்றுள்ளனர்.

அதன்போது மன்னார் பகுதியிலிருந்து கொழும்பு பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் அவர்களில் ஒருவர் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் பாலத்திலிருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர், புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சோகம். #இலங்கை செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர், புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சோகம். #இலங்கை Reviewed by Madawala News on November 05, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.