நடைபெற உள்ள லங்கா பிரீமியர் லீக் மற்றும் காலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கபட்டது ; விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு



நடைபெற உள்ள  லங்கா பிரீமியர் லீக் 2021 கிரிக்கெட் போட்டியின் போது  மட்டுப்படுத்தப்பட்ட

பார்வையாளர்களை அனுமதிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் என்று விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அறிவித்தார். 


"இந்த ஒப்புதலில், தற்போது  நடந்துகொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்  கூட்டத்திற்கான அனுமதியும் அடங்கும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.


ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் இல்லை என்று கூறிய அமைச்சர், தீவிர கிரிக்கெட் ரசிகன் என்ற வகையில், கிரிக்கெட் போட்டியை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 


LPL 2021 இல் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டத்தினரே கலந்துகொள்ள சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என்றார். 


இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள கடுமையான வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். 


லங்கா பிரீமியர் லீக் 2021 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பில்   ஆரம்பமாகும், தொடக்க போட்டி  காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


20 போட்டிகள  கொண்ட போட்டியின் முதல் சுற்று, இறுதிச் சுற்று ஆட்டங்களைத் தொடர ஹம்பாந்தோட்டை  நகருக்குச் செல்வதற்கு முன், கொழும்பு R பிரேமதாச விளையாட்டரங்களில் போட்டி  விளையாடப்படும்.


லீக்கின் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 23, 2021 அன்று ஹம்பாந்தோட்டையில்  நடைபெறும், அதே சமயம் இந்த ஆண்டு போட்டி டிசம்பர் 24 அன்று இறுதிப் போட்டிகளுக்காக  Reserve  Day முறைக்கு அனுமதி உண்டு,

நடைபெற உள்ள லங்கா பிரீமியர் லீக் மற்றும் காலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கபட்டது ; விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு நடைபெற உள்ள  லங்கா பிரீமியர் லீக் மற்றும் காலி  டெஸ்ட் போட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு  அனுமதி வழங்கபட்டது ; விளையாட்டுத்துறை  அமைச்சர் தெரிவிப்பு Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.