வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தீவிரமடைந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்..



இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தின் கீழ்
மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தீவிரமடைந்து அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுவதிலும் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
*************************
அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இது மேற்கு வடமேற்குத் திசையினூடாக நகரக்கூடும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழ் கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.

கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தீவிரமடைந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்.. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தீவிரமடைந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை வீழ்ச்சி  அதிகரிக்கும்.. Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.