கிண்ணியா படகு விபத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரம்.


அதன்படி இலங்கை கடற்படையினர் எட்டு (08) மீட்புக் குழுக்கள் நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை

தேடும் நடவடிக்கைகளை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றனர்.


 தற்போதுள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக விபத்துக்குள்ளான படகு குறித்த பகுதியில் வசிப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.


தற்போது வரை 6 பேர் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக  மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், 17 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.


அதேநேரம் காணாமல்போனவர்களை தேடும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அதேநேரம் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.

கிண்ணியா படகு விபத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரம். கிண்ணியா  படகு விபத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரம். Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.