தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை.


தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்  நிலைகொண்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல்  மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

*************************

தாழ் அமுக்கப் பிரதேசத்தின் தாக்கத்தின்  காரணமாக நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றும் மழையுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்கள்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கலாநிதி 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை.  தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்...  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை. Reviewed by Madawala News on November 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.