இந்த ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தாதவரை நாடு முன்னேறாது ; சஜித்*எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராயர் மல்கம் காதினல் ரஞ்சித் ஆகியோரிடையேயான சந்திப்பு*


ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு,பல்வேறு சதிகாரர்கள் பல்வேறு சேறு பூசுதல் மற்றும் சதிகளை முன்னெடுத்து வருவதாகவும், ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது நற் பெயருக்கு கலங்கம் ஏறபடுத்த குறிப்பிட்ட தரப்பினர் செயல்பட்டு வருவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஈஸ்டர் தாக்குதல் நடந்தவுடனே,அதுபற்றி விசாரித்து,தாக்குதல் நடந்த தேவாலயங்களை புனரமைக்க தான் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறிய எதிர்க் கட்சித் தலைவர், இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை உடனடியாக விசாரித்து கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.


இவற்றை மேற்கொள்ளவதற்கு பதிலாக பல்வேறு சதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறிய எதிர்க் கட்சித் தலைவர், கட்சித் தலைவராக,ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு தாம் எப்பொழுதும் பலத்தையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளதே தவிர அவர்களின் நிலைப்பாடுகளில் சிறிதளவும் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எந்த வித தொடர்பும் தனக்கும் புலனாய்வுப் பிரிவின் தலைவர்களுக்கும் இருந்ததில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் அறிவுரைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.


இந்த ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தாதவரை நாடு முன்னேறாது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களான மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அதன் பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி முன் நிற்கும் என்றும் கூறினார்.


இதேவேளை,பேலியகொடையிலிருந்து நீர்கொழும்பு வரையான கலப்பு, பாதுகாப்பு என்ற போர்வையில் நகரமயமாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.


எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(04) காலை கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பேராயர் மல்கம் காதினல் ரஞ்சித்தை சந்தித்தார்.இதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தாதவரை நாடு முன்னேறாது ; சஜித் இந்த ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தாதவரை நாடு முன்னேறாது ; சஜித் Reviewed by True Nation on November 05, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.