எங்களுக்கு மாலை, மரியாதைகள் அவசியம் இல்லை... உங்களது வாக்கின் மூலம் இன்று உரிமைகளை அனுபவிக்கிறீர்கள் . அதுவே எம் மகிழ்ச்சி.


பொதுமக்கள் தமக்கான சேவையை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே எமக்கு

வாக்களித்தனர். எம்மிடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.

உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை எம்மிடமிருந்து சேவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வழங்கினீர்கள். வாக்குச் சீட்டில் அதனை குறிப்பிடா விட்டாலும் உங்களது கிராமங்கள், மற்றும் பிரதேசங்களுக்கு அவசியமான வேலைகளை எங்களின் மூலமாக துரிதமாக நிறைவேற்றிக் கொள்வது உங்களது எதிர்பார்ப்பு ஆகும்.  அது உங்களது உரிமை ஆகும். அது உங்களது வாக்கின் பலம் ஆகும். எனவே மக்கள் எமக்கு வாக்களிப்பதன் நோக்கம் தமக்கான சேவையை பெற்றுக் கொள்வதேயன்றி எமக்கு பணிவிடை செய்வதல்ல என்று நீர்விநியோக அபிவிருத்தி அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.


அயகம, கவரகிர பிரதேசத்தில் குடிநீர் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவின் போதே அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.


இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கௌரவ அமைச்சர், வாசுதேவ நாணாயக்கார இந்த கவரகிர பிரதேசம் மக்கள் நீண்ட காலமாக வசிக்கும் பிரதேசமாக இருந்த போதிலும் இங்கு குடிநீர் விநியோக திட்டம் பெற்றுக்கொடுக்கப் படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று தெரிவித்தார்.


இதில் எங்களுக்கு மாலை, மரியாதைகள் அவசியம் இல்லை. நீங்கள் வாக்களிக்கும் போது அந்த வாக்கு சீட்டில் நீங்கள் குறிப்பிடாத போதிலும் இந்த வாக்கின் ஊடாக எமது கிராமம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே அளித்தீர்கள் என்ற விடயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். உங்களது  அந்த உரிமைதான் இப்போது நிறைவேற்றப்படுகின்றது. உங்களது வாக்கின் மூலம் நீங்கள் அடைந்து கொள்ளும்  உரிமையை இன்று அனுபவிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. உங்களது வாக்கின் பெறுமாணத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். நாங்கள் வாக்கு பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான் நாட்டில் நடைபற வேண்டிய விடயங்கள் பற்றி எமக்கு கூற வேண்டும். அந்த விடயங்களை நிறைறே;றும் பொறுப்பை சுமந்தவர்ளாக இந்நாட்டு அரசாங்க ஆட்சியை கொண்டு செல்கிறோம். 


அரசாங்கத்தின் மூலம் இடம்பெற்ற சில தவறுகளும் இருக்கின்றன. மிக விரைவாக முன்னெடுக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அனைத்து விடயங்களும் தூய்மையான எண்ணத்துடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தூய்மையான எண்ணத்தையு நாம் இங்கு கவனிக்க வேண்டும். அரசாங்கம் எந்த விடயத்தை செய்திருந்தாலும் அதனை தூய்மையான எண்ணத்துடன் மாத்திரமே செய்திருக்கும். அது இந்நாட்டு பிரஜைகளின் நலனை நோக்கமாக கொண்டே செய்திருக்கும்.

எனினும் சில சந்தர்ப்பங்களில் எமது இலக்கு தவறி இருக்கலாம். அந்த விடயத்திற்காக நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும். உங்களது வாக்கின் உரிமையே  தற்போது உங்களுக்கு கிடைக்கின்றது. அந்த வகையில் வாக்கின் உரிமையை நாம் பெற்றுக்கொடுக்கும் போது எமக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் அவற்றை பெற்றுக் கொடுப்பதில்லை. மாறாக, எமக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்தே கொடுக்கின்றோம். எமது செயற்பாடுகளில் உள்ள பெறுமாணம் அதுதான். ஏனக்கு பரிச்சயமான தும்பரமாமான கிராமத்திற்கும் குடிநீர் கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த கட்டமாக கவரகிரிய, கொழம்பவௌ, மற்றும் பிட்டகந்த உள்ளிட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வசதி வழங்கப்படவுள்ளது. இது மிகப்பெரியதொரு குடிநீர் திட்டம் ஆகும்.

இந்த மக்கள் நீர் விநியோக திட்டமானது தூய்மையான நீரை பெற்றுக் கொடுக்கும் ஒரு திட்டம் ஆகும். இந்த நீரை பெற்றுத் தரும் மூலாதாரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த இடத்திற்கான நீர் இந்த மலையுச்சியில் அமைந்துள்ள நிவுண்ண நீர்வீழ்ச்சியில் இருந்து கிடைக்கின்றது. அந்த நிவுண்ண நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வழிந்தேர்டுவதை தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமாயின் அதற்கு மேற்பகுதியில் உள்ள காட்டு வளத்தை பாகுகாக்க வேண்டும். அந்த காட்டு வளம் பாதுகாக்கப் படும் அளவிற்கே எமக்கு அதிகளவு நீரை பெற்றுக் கொள்ள முடியும். எனவே நாம் நீர் வளத்தை அனுபவிக்கும அதே வேளை அதனை பாதுகாப்பதில் கரிசனை கொள்ள வேண்டும். சுமார் நூறு வருடங்களின் பினனர் நான் மறுபிறப்பெடுத்து இந்த பிரதெசத்திற்கு வருகை தரும் பொழுது இந்த நீர்விநியோக திட்டம் இதே அமைப்பில் பேணப்படும் என்று நம்புகின்றேன்.

இந்த நிகழ்வில் ஏற்றுமத் பொருட்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, அயகம பிரதேச சபை தலைவர் திரு.நிஷhந்த புஷ;பகுமார, உப தலைவர் திரு.ஜீ.எம் ஜயசுந்தர, கௌரவ அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பண்டாரகம பிரதேச சபையின உபதலைவர் திரு.சரத் ஆர் ரணசிங்ஹ, மக்கள் குடிநீர் திட்ட இரத்தினபுரி மாவட்ட பொறுப்பதிகாரி திரு.அருண விN;;;ஜரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாற்பது கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில்; அமைக்கபடும் நான்கு மக்கள் குடிநிர் திட்டங்களுக்கான பணிகள் குறித்த தினத்தில் ஆரம்பிக்க பட்டமை கறிப்பிடத் தக்கது.

எங்களுக்கு மாலை, மரியாதைகள் அவசியம் இல்லை... உங்களது வாக்கின் மூலம் இன்று உரிமைகளை அனுபவிக்கிறீர்கள் . அதுவே எம் மகிழ்ச்சி.  எங்களுக்கு மாலை, மரியாதைகள் அவசியம் இல்லை...  உங்களது வாக்கின் மூலம் இன்று உரிமைகளை அனுபவிக்கிறீர்கள் . அதுவே எம் மகிழ்ச்சி. Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.