நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை. ஆர்ப்பாட்டம் மட்டுமே !!நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை, ஆனால் பராமரிப்புச் சேவையிலுள்ள ஊழியர்களை

கொழும்புக்கு அழைக்கிறோம் என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.


மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.


தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆயிரம் முறைக்கு மேல் யோசித்து வருகிறோம். ஆனால் நாளைய தினத்திற்கு பின்னர் ஒரு நாள் நிர்ணயம் செய்யப்படும். மின்வெட்டுக்கு பின்னர் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.


மின் நிலையங்களில் தாங்கள் இல்லாமல், நிலையான மின்சாரம் வழங்க வழி இல்லை என்பதை நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


யுகதனவி எல்என்ஜி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக நாளை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை. ஆர்ப்பாட்டம் மட்டுமே !! நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை. ஆர்ப்பாட்டம் மட்டுமே !! Reviewed by True Nation on November 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.