ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்.(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய இளைஞர் சக்தியின்] அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான

  கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்  மயந்த திஸாநாயக்கவின்  இல்லத்தில் இடம்பெற்றது.

 

ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளரும், அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.


இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின்எதிர்கால நலன் கருதி கல்வி, ஊடகம், விளையாட்டு, கலாசாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் றிஸ்கான் முகம்மட், தவிசாளரிடம்  கையளித்ததுடன்  எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இச் செயற்றிட்டங்களைமேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினார்.


இந் நிகழ்வில், 

பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆஷிக் சுபையிரும் கலந்து கொண்டார்.

ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல். ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல். Reviewed by Madawala News on November 04, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.