வரவு செலவுத்திட்டம் தோல்வி... பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அடுத்தநாளே சுவீடன் பிரதமர் ராஜினாமாசுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட Magdalena Andersson சில மணித்தியாலங்களில் இராஜினாமா செய்துள்ளார்.


சமூக ஜனநாயக கட்சியின் தலைவியாக நேற்று (24) அறிவிக்கப்பட்ட Magdalena Andersson, அவரது கூட்டணிக் கட்சியினர் விலகியதுடன் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய வரவு செலவுத்திட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென கூட்டணி பசுமைக்கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தனித்து ஆட்சியமைக்கும் கட்சியின் தலைவியாக பிரதமர் பதவியை ஏற்க எதிர்பார்த்துள்ளதாக Magdalena Andersson தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தோல்வி... பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அடுத்தநாளே சுவீடன் பிரதமர் ராஜினாமா வரவு செலவுத்திட்டம் தோல்வி... பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அடுத்தநாளே  சுவீடன் பிரதமர் ராஜினாமா Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.