நாட்டு மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறும் அளவிற்கு இந்த அரசாங்கம் பிடிவாதம் கொண்ட அரசாங்கமல்ல.



பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அரசாங்கத்துக்குள்ளும் இரு நிலைப்பாடுகள் உள்ளதாக அமைச் சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பாக கடந்த வார அமைச்சரவையில் தீவிரமாக கலந்து ரையாடப்பட்டது.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இணைந்து செயற்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து தீவிரமாக ஆராயப் பட்டன. நீங்கள் கூறுவது போன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து நாடாளுமன்றத்திலும் இரு நிலைப்பாடுகள் உள்ளன. ஆனால், இந்த இரு நிலைப்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தாதது எந்த நிலைப்பாடு என்பது தீர்மானிக்கப்படும். ஆனால், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது குறித்து தற்போது எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனினும், பொருட்களின் விலை மற்றும் மரக்கறி களின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. அவர்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறும் அளவிற்கு இந்த அரசாங்கம் பிடிவாதம் கொண்ட அரசாங்கமல்ல. இந்த பாதிப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யோ.தர்மராஜ்
நாட்டு மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறும் அளவிற்கு இந்த அரசாங்கம் பிடிவாதம் கொண்ட அரசாங்கமல்ல. நாட்டு மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறும் அளவிற்கு இந்த அரசாங்கம் பிடிவாதம் கொண்ட அரசாங்கமல்ல. Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.