டொலர்கள் இல்லாததால் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் தேக்கம்: பந்துல



சி.எல்.சிசில்

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் ஆயிரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை யில் தெரிவித்துள்ளார்.


சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இது பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எனவே, அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பருப்பு, வெங்காயம், சீனி, உருளைக்கிழங்கு, நெத்தலிக் கருவாடு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன.


டொலர் பற்றாக்குறை மிகவும் பாரதூரமானதாக மாறி பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

டொலர்கள் இல்லாததால் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் தேக்கம்: பந்துல டொலர்கள் இல்லாததால் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் தேக்கம்: பந்துல Reviewed by True Nation on November 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.