'உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் எமது அரசாங்கம் தண்டிக்கும்'



  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிப்பது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

எனத் தெரிவித்த தொழிற்றுரை அமைச்சர் விமல் வீரவன்ச,  அது கண்டிப்பாக எமது அமைச்சரவையிலோ, அலரிமாளிகையிலோ இரகசியமாக ஒன்று கூடியோ எடுக்கும் நடவடிக்கை அல்ல. அது நீதிமன்றம் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என்றார்.


தொடர்ந்து தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த வரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகின்றது. உலகில் வேறு நாடுகளில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று எத்தனை வருடங்களுக்கு பின்னர், தண்டனை அல்லது தீர்ப்பளிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.


அதேபோலதான், அண்மையில் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்தின் பின்னராக, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பார்க்கலாம். ஆனால் இலங்கையின் நீதிமன்ற செயற்பாடுகளில் இவ்வாறான பிரச்சினை சென்றால் எமது நாட்டு நீதிமன்ற முறைகளுக்குள் எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சிறிது கால தாமதம் ஏற்படும் என தெரிவித்தார். 


சாதாரணமாக நீதிமன்ற செயற்படுகளை முன்னெடுப்பதற்கான காலவரையறை ஒன்று உள்ளது. அந்த கால வரையறையை  சாதாரணமாக சிறிதளவு குறைத்தாலும், பெரும்பாலும் இவ்வாறான வழக்குகள் தொடர்பில் அதிக காலம் செல்வதை மறுக்க முடியாது என்றார்.

'உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் எமது அரசாங்கம் தண்டிக்கும்' 'உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும்  எமது அரசாங்கம் தண்டிக்கும்' Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.