70 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பொலீசார் வலைவீச்சு.வத்துகஹமுல்ல பிரதேசத்தில் 70 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக மரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூதாட்டி திருமணம் ஆகாதவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் நாத்தாண்டி, வத்துகஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண், வீட்டில் தனியாக இருக்கும்போது நேற்று (23) காலை 1.00 மணியளவில், வீட்டுக்கு வந்து தன்னை மிரட்டி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபர் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளான வயோதிப பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(ஜூட் சமந்த )
70 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பொலீசார் வலைவீச்சு. 70 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பொலீசார் வலைவீச்சு. Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.