மூன்று தேங்காய்களை திருடி கைதான மூவர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிப்புகாலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில்
 மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 200,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெல உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரும் காலியைச் சேர்ந்த இருவருமே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி திருடர்கள் நடமாடுவதால், தென்னந்தோப்பு உரிமையாளர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் பரப்பைக் கொண்ட தோப்பில் சிசிரீவி கெமராவை பொருத்தியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று தேங்காய்களை திருடி கைதான மூவர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிப்பு மூன்று தேங்காய்களை திருடி கைதான மூவர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிப்பு Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.