15 சிறுமி கர்ப்பம்; உதவி செய்த குற்றத்தில் சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கைது. #இலங்கை அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஒரு

பிள்ளையின் தந்தையான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். அச்சிறுமியின் சகோதரி, தாய் ஆகியோரை நேற்று முன்தினம் (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார். சிறுமியின் சகோதரியின் கணவனான 31 வயது நபரே  தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். 


தலைமறைவாகிய நபரை தேடி, கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அதேவேளை, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயது தாயார், சிறுமியின் 24 வயது சகோதரி  ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

15 சிறுமி கர்ப்பம்; உதவி செய்த குற்றத்தில் சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கைது. #இலங்கை 15 சிறுமி கர்ப்பம்; உதவி செய்த குற்றத்தில் சிறுமியின்  தாய் மற்றும்  சகோதரி கைது. #இலங்கை Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.