மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்ற வேளை ஏற்பட்ட அனார்த்தம்... இரு இளம் வயதினர் பலி.தனமல்வில-வெல்லவாய பிரதான வீதியில் கித்துல்கொட, அலிமங்கட சந்தியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திஸ்ஸமஹாராமவிலிருந்து வெல்லவாய நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை, வேன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது லொறியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடும் காயங்களுக்குள்ளானதுடன் பொதுமக்களின் உதவியுடன் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவ்வேளையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் திஸ்ஸமஹாராம உடமத்தலவைச் சேர்ந்த லக்ஷித அத்தபத்து (19), எஸ்.ஆர். கவிந்து லக்ஷான் (19) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் மற்றும் லொறியின் சாரதிகள் இருவரும் கைதுசெய்துள்ள தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்ற வேளை ஏற்பட்ட அனார்த்தம்... இரு இளம் வயதினர் பலி. மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்ற வேளை ஏற்பட்ட  அனார்த்தம்... இரு இளம் வயதினர் பலி. Reviewed by Madawala News on October 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.