பீடைகள் நிரம்பிய அரசியலில் சிறந்த வேளாண்மைகாரனாக இருந்து தூய அரசியலை விதைத்தவரே தலைவர் அஸ்ரப்.



மாளிகைக்காடு நிருபர்
முகவரி தேடியலைந்து முஸ்லிம் சமூகத்தின் முகவரியை
பெற்றுத்தந்த முஸ்லிம் அரசியலின் முகவரி, இலக்கியவாதி, ஜனாதிபதி சட்டத்தரணி, அமைச்சர், முஸ்லிங்களின் ஜனநாயக பேரியக்கத்தின் தலைவர் என பல்முகம் கொண்ட முஹம்மது ஹுசைன் முஹம்மது அஸ்ரப் எனும் அரசியல் ஆளுமை உதித்து 73 ஆண்டுகள் கடந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ.ல.மு.கா.பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஸ்ரீ.ல.மு.கா. ஸ்தாபக தலைவரின் பிறந்ததினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, எம்மை விட்டு பிரிந்து 21 ஆண்டுகள் கடந்தும் நிரப்ப முடியா வெற்றிடத்தை உண்டாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெருந்தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தினரால் மாத்திரமின்றி இந்த நாட்டின் சகல மக்களினாலும் கௌரவத்துடன் நோக்கப்பட்ட நோக்கப்படும் நல்ல அரசியல்தலைவர்களில் ஒருவராக இருந்து வந்துள்ளார். பீடைகள் நிரம்பிய அரசியலில் சிறந்த வேளாண்மைகாரனாக இருந்து இலங்கை அரசியலில் களைபிடுங்கி தூய அரசியலை விதைத்த முன்னிலை அரசியல் போராளியாக இருந்த தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் பிறந்து 73 ஆண்டுகள் இன்று கடந்துள்ளது.

தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் இந்த நாட்டின் பல்லின சமூகத்திற்கும் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரும் சேவைகளை செய்துள்ளார். அவரின் சேவைகளை இறைவனை பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கிட இருக்கரமேந்தி பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

UMAR LEBBE
NOORUL HUTHA UMAR
பீடைகள் நிரம்பிய அரசியலில் சிறந்த வேளாண்மைகாரனாக இருந்து தூய அரசியலை விதைத்தவரே தலைவர் அஸ்ரப். பீடைகள் நிரம்பிய அரசியலில் சிறந்த வேளாண்மைகாரனாக இருந்து தூய அரசியலை விதைத்தவரே தலைவர் அஸ்ரப். Reviewed by Madawala News on October 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.