மழையுடனான வானிலையில் மாற்றம்.. பல பிரதேசங்களில் சீரான வானிலை.



மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை 
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில்சீரான வானிலை காணப்படும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு,வடமத்திய,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்
*************************
கொழும்பு தொடக்கம் காலி,மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

மழையுடனான வானிலையில் மாற்றம்.. பல பிரதேசங்களில் சீரான வானிலை. மழையுடனான வானிலையில் மாற்றம்.. பல பிரதேசங்களில் சீரான வானிலை. Reviewed by Madawala News on October 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.