இந்த நாடு இன்று பரிதாபமான சூழ்நிலையில் உள்ள வேளையில், ஒரு பெரிய மோசடி நாட்டில் இடம்பெற்றுள்ளது.



பண்டோரா ஆவணம் விவகாரம் குறித்து உடனடியாக சர்வதேச
 விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று வலியுறுத்தியுள்ளார்.

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பல நாட்டுத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர்.

இந்த நாடு இன்று பரிதாபமான சூழ்நிலையில் உள்ளது. அத்தியாவசிய உணவுகளை வாங்க நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக கல்வி சரிந்துள்ளது. ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க உரிமைகளுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரொனா பேரழிவால் உயிரிழந்துள்ளனர். போதை மருந்து மாஃபியாவால் பல நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். விவசாய சமூகம் உட்பட அனைத்து பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துள்ளது.

அத்தகைய நேரத்தில் ஒரு பெரிய மோசடி நாட்டில் இடம்பெற்றுள்ளமை குறித்து பண்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த பெரும் மோசடியின் உண்மையான நிலைகள் அரசியல் தலையீடுகள், பாரபட்சமின்றி, வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச அங்கீகாரத்துடன் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாடு இன்று பரிதாபமான சூழ்நிலையில் உள்ள வேளையில், ஒரு பெரிய மோசடி நாட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடு இன்று பரிதாபமான சூழ்நிலையில் உள்ள வேளையில், ஒரு பெரிய மோசடி நாட்டில்  இடம்பெற்றுள்ளது. Reviewed by Madawala News on October 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.