நான் பலவீனமானவன் அல்ல... உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதை முகப்புத்தகம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.


 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும்

அளவிற்கு பலவீனமான நபர் நான் அல்ல, குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நான் ஆரம்பத்தில் அறித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. 


ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயார், தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை நான் முன்கூட்டியதாக அறிந்ததாகவும், குண்டுத்தாக்குதலை தடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது.


எனது அரசியல் வரலாற்றில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை மறக்க முடியாத ஒரு வேதனைக்குரிய சம்பவமாகவே கருதுகிறேன்.


ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பெரும் நெருக்கடிகளையும், தனிப்பட்ட மன உளைச்சலையும் இதுவரையில் எதிர்க்கொண்டுள்ளேன்.


குண்டுத்தாக்குதலை அறிந்து நாட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு நான் ஒன்றும் பலவீனமான நபர் அல்ல.


குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயார், தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க தயாரில்லை.2019 ஏப்ரல் 20 மற்றம் 21 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இருந்தேன். 


ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் எனக்கு அறிவிக்கவில்லை.

முகப்புத்தகம் ஊடாகவே அறிந்துக்கொண்டேன். அதிகாரிகள் தங்களின்பொறுப்பை முறையாக செயற்படுத்தவில்லை.


சேதன பசளை திட்டம் என்பது சிறந்த கொள்கை திட்டாகும், நாட்டுக்கு தேவையான திட்டமாகும். விவசாயத்துறை அமைச்சராக 6 வருடகாலம் பதவி வகித்தேன்.


2007ஆம் ஆண்டு சேதன பசளை அதிகார சபையை நிறுவினேன், ஜனாதிபதியாக பதவி வகித்த போது விசமற்ற உணவு கொள்கை திட்டத்தை தேர்தல் கால கொள்கையாக அறிவித்தேன். இதற்காக செயற்திட்டத்திற்காக 100 கோடி அளவில் நிதி செலவிடப்பட்டது.


சேதன பசளை திட்டத்தை முன்மாதிரி திட்டமாக செயற்படுத்தினோம். எமது ஆட்சியில் சேதன பசளை திட்டம் முன்னேற்றமடைந்தது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சேதன பசளை முன்மாதிரி செயற்திட்டம் கைவிடப்பட்டது.


இரசாயன திட்டத்தை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக முன்னெடுத்தது.இதனை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன. அப்போது நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொலைப்பேசியில் உரையாடுகையில


'சேதன பசளை தொடர்பில் எனக்கு நன்கு அனுபவம் உள்ளது, எனது அனுபவத்திற்கு அமைய இரசாயன பசளையை தடை செய்து ஒரேமுறையில் சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும், ஆகவே சேதன பசளை திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என வேண்டும் குறிப்பிட்டேன்.


'சேதன பசளை திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு கலந்துக்கொள்ள முடியுமா என அவ்போது ஜனாதிபதி என்னிடம் வினவினார். எனக்கு தெரிந்த விடயங்களை குறிப்பிடுவதற்கு தயாராகவுள்ளேன்' என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.


ஜனாதிபதியுடனான உரையாடலை தொடர்ந்து அரைமணித்திலாயத்திற்கு பின்னர் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தொலைப்பேசியில்என்னிடம்தொடர்புக் கொண்டார். சேதன பசளை தொடர்பிலான அடுத்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார்.


சேதன பசளை தொடர்பான கூட்டத்தில் என்னை பங்குப்பற்றச்செய்ய வேண்டும்.என ஜனாதிபதியின் தீர்மானத்தை எவரோ இடையில் தடுத்துள்ளார்கள்.அதன் பின்னர்சேதன பசளை தொடர்பிலான கூட்டத்திற்கு அழைக்கவில்லை.என்றார்.

நான் பலவீனமானவன் அல்ல... உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதை முகப்புத்தகம் மூலமாகவே அறிந்து கொண்டேன். நான் பலவீனமானவன் அல்ல...  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதை முகப்புத்தகம்  மூலமாகவே  அறிந்து கொண்டேன். Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.