நான் சொன்னதை அரசாங்கம் கவனித்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை கொரானாவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியும் !ஜனாதிபதி முதல் பிரதமர் வரை மற்றும் பிரதமர் முதல் இந்த

 அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வரை சகலரும் முழுமையாக தோல்வியடைந்து விட்டனர் என்றும் இது ஒரு பாலர் பாடசாலை குழந்தைக்குக் கூட தெரியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார். 


அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு தொடங்கியுள்ளதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி வெளியே வந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குமாறு தான் அவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.


இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் மேற்கொண்டது தியாகங்களே என்றும், மாறாக அரசாங்கம் மக்களுக்கு அளித்த பரிசு, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரிசை யுகம் உருவாக்கப்பட்டதோடு, மக்களை வரிசையில் நிற்க வைத்ததே என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.


மக்கள் எண்ணற்ற விதமாக கஷ்டப்பட்டு முடிவில்லாத தியாகங்களைச் செய்யும் போது அரசாங்கம் கேட்கும் கேட்கும் அனைத்தையும் வழங்க மக்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவும், பின்னர் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவும் பின்னர் இருபதாம் திருத்தத்தின் மூலம் அதிகாரத்தை வலுப்படுத்தவும் மக்கள் அரசாங்கத்திற்கு இடமளித்தனர்.அவறுக்கொல்லாம் இன்று அரசாங்கம் மக்களை எப்படி நடத்துகிறது என்பதும் இது விதியின் கேலிக்கூத்தாக மாறியுள்ளது எனவும் கூறினார்.


பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்றும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் உள்ளக வளங்களை விற்பனை செய்வதன் மூலமும் அரசாங்கம் சாதனைகளை படைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.


முன்னால் மாகாண சபை உறுப்பினர் தென்னக்கோன் நிலமே அவர்களுடைய திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியின் ஹம்பந்தோட்டை வாக்காளர் பிரிவுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான  அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு  இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி, முன்னால் மாகாண சபை உறுப்பினர் தென்னக்கோன் நிலமே உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


இன்று இலங்கை சக்திவாய்ந்த நாடுகளுக்கான போர்க்களமாக மாறியுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் ஒரு நாட்டிற்கு மேற்கையும்  மற்றொரு நாட்டிற்கு கிழக்கையும், வடக்கை வேறொரு நாட்டிற்கும், தெற்கை மற்றொரு நாட்டிற்கும் ஒரு போட்டியாக விற்பனை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து எதிர்க்கட்சியாக தான் கூறிய அனைத்தும் உண்மையாகிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தான் சொன்னதை அரசாங்கம் கவனித்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை கொரானாவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக செய்தது மௌட்டிகத்திற்கு பின் ஓடியது தான் என்றும் அத்தியாவசிய தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்து நல்லெண்ணத்துடன் அரசாங்கத்திற்கு அறிவித்தபோதும், ​​அரசாங்கம் அதை கேலி செய்ததாகவும் அவர் கூறினார்.அரசாங்கம் கொரோனாவை ஒரு கராணாவாக மாற்றியதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற அவர் சொன்னதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.


ஆசிரியர் அதிபர்களின் வேலைநிறுத்தத்தை வெறுப்புடன் பார்க்கும் அரசாங்கம், ஆபத்தில் உட்படுத்தியிருப்பது இந்த நாட்டுக் குழந்தைகளின் கல்வியே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியதோடு,அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சுபோதனி ஊதிய ஆணைக்குழுவை கிடப்பில் போடும் நிலையில் அரசாங்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.இதன் மூலம், இந்த நாட்டில் நாற்பது இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்துடன் அரசாங்கம் விளையாடிக்கொண்டிருப்பதாகவும் இது இந்த நாட்டின் ஆசிரியர்களின் தவறு அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.


சரிந்து விட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்றும் மத்திய வங்கி பணம் அச்சிடும் மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன் இறுதி முடிவு அதிக பணவீக்கத்தால் நாட்டை அழிவிலிருந்து அழிவை நோக்கி கொண்டு செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.


அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது என்றும் குறிப்பாக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை அரசியல் ரீதியாக வேட்டையாடவும் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இத்தகைய அடக்குமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தியோ  அல்லது எதிர்க்கட்சிகளோ ஒரு போதும்  அதற்கு இடமளிக்காது என்றும் அவர் கூறினார்.

நான் சொன்னதை அரசாங்கம் கவனித்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை கொரானாவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியும் ! நான் சொன்னதை அரசாங்கம் கவனித்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை கொரானாவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியும் ! Reviewed by True Nation on October 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.