எனக்கு எதிரான பொய்யான செய்தி தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.



இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்வதற்காக அரச வங்கி
ஒன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ள பொய்யான செய்தியை ஜனாதிபதியின் செயலாளர் முற்றாக மறுத்துள்ளாா்.



“அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் உண்மைக்குப் புறம்பான வகையில் உருவாக்கப்பட்டதாகும். அரச வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல் என்பது, குறித்த வங்கிக்கும் கணக்கு உரிமையாளருக்கும் இடையிலான செயற்பாடாகும். இதில், உரிய விதிமுறைகளுக்கமைய செயற்படுவது வங்கியின் பொறுப்பாகும்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி தன்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்ப் பிரசாரம் தொடர்பாக, ஏற்கனவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்தார்.

இதுதொடர்பில் விளக்கமளித்து அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
எனக்கு எதிரான பொய்யான செய்தி தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனக்கு எதிரான பொய்யான செய்தி தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. Reviewed by Madawala News on October 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.