லசித் மலிங்கவின் சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன்.ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில்

 அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் புரிந்துள்ளார்.


முன்னாள் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஞாயிற்றுக்கிழமை ஸ்காட்லாந்துக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போடியில் மொத்தமாக 108 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கவின் சாதனை முறியடித்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஷாகிப் தற்போது 89 போட்டிகளில் இருந்து 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இதற்கு முன்னர் மலிங்க 84 டி-20 போட்டியில் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை நியூசிலாந்தின் டிம் சவுத்தி (99), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி (98) மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (95) ஆகியோரு முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


லசித் மலிங்கவின் சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன். லசித் மலிங்கவின் சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன். Reviewed by Madawala News on October 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.