அரசு உடனடியாக பதவி விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் !!எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களின்

 விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) கேள்வி எழுப்பினார்.


இந்த அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய  குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரித்து வருவதாகவும் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற  ''எதிர்க்கட்சியிலிருந்து மூச்சு ' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 31 ஆவது கட்டமாக இருபது இலட்சம் ரூபா  (2,000,000/-) பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் இதில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்களிப்புடன்  தந்திரிமலை ரஜமகா விகாரையில் வருடாந்தம் நடைபெறுகின்ற புனித வைபவத்திற்கு ஒருங்கிணைவாக அதன் பணிகள் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இந்த விகாரைக்கு வருகை தந்ததுடன் தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தந்திரிமலே சந்தரதன தேரர் உள்ளிட்ட சங்கைக்குரிய தேரர்களிடம் இது பற்றி நீண்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


இதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் அவரினால்,


 01. Multiparameter Monitor - ரூ. 295,000.00


02. fetal Monitor with recorder - S3 + fetal Heat Doppler- ரூ.400,000.00


03. Autoclave -  595,000 x 2 1,190,000.00


04. Digital BP - 24,500.00


05. Aneroid -20,000.00


06. Surgical Instrument set for Gynecology and Emergency - 70,500.00 


ஆகிய உபகரணங்கள் தந்திரிமலை பிரதேச மருத்துவமனையின் நிலையப் பொறுப்பு மருத்துவ உத்தியோகத்தர் மருத்துவர் மஞ்சுல குணதிலக அவர்களிடம் நன்கொடை உபகரணங்கள் வழங்கப்பட்டன.


சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் அலுவலகமொன்றை திறந்து வைக்கும் மக்கள் சந்திப்பின் போது பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி காலஞ்சென்ற புகழ்மிக்க இராணுவ வீரரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட இருபத்தொன்பது பேர்களின் நினைவாக நடைபெற்ற ஞாபகார்த்த வைபவத்தில் இணைந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மருத்துவமனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் போது கிடைக்கின்ற நன்மைகள் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட காலஞ் சென்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.


இதன் போது தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தந்திரிமலே சந்தரதன தேரர் உள்ளிட்ட சங்கைக்குரிய தேரர்கள் கலந்து கொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, முன்னாள் அமைச்சர் சந்திரானி பண்டார, முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு  'எதிர்க்கட்சியியிருந்து ஓர் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.


இதற்கு முன்னர் 30 கட்டங்களில்  876 இலட்சம் (ரூபா 87,634,000)  பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.  

அரசு உடனடியாக பதவி விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் !! அரசு உடனடியாக பதவி விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய  குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் !! Reviewed by Madawala News on October 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.