பாராளுமன்றத்தில் ஹக்கீம் தெரிவித்த கருத்து பிழையானது.கடந்த வியாழக்கிழமை (07/10/2021) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் இடம் பெயர்ந்த மக்களின் பிள்ளைகள் தம் பெற்றோர்கள் பிறந்த இடமான வடக்கில் தங்களுடைய வாக்குரிமையை பதிவு செய்ய விரும்புவதாக பேசியதை புத்தளம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.


சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக புத்தளம் மக்கள் தங்களின் அத்தனை வளங்களையும் அவர்களோடு பகிர்ந்து வாழ்ந்துவரும் இந்த சூழ்நிலையில், புத்தளத்தில் பிறந்து வளர்ந்து வாழும் அவர்களின் பிள்ளைகள் புத்தளம் மக்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் தாம் இடம்பெயர்ந்தவர்கள் என்ற நினைப்பே கிடையாது. இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதமானோரும் அவர்களின் பிள்ளைகளில் 100 வீதமானவர்ளும் புத்தளத்தில் வாக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாது கடந்த பொதுத்தேர்தலில் அவர்கள் வாக்களித்து 31வருடங்களின் பின்பு நாம் பெற்ற வரலாற்று வெற்றிக்கு துணை நின்றார்கள்.


இடம் பெயர்ந்த சமூகம் என்று ஒரு சமூகம் புத்தளத்தில் இல்லை, இருப்பவர்கள் எல்லோரும் புத்தளத்து சமூகம் என்பதை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் புரிந்துகொள்ளவேண்டும். புத்தளத்தில் வாழும் மக்களை, புத்தளத்தில் வாக்குப்பதிவு செய்வதற்கான வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புலிகளால் இடம்பெயர்க்கப்பட்ட மக்களில் ஒரு சிலர் மாத்திரம் தங்களுடைய தாயகத்திற்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்று உறுதியாக இருப்பதால், அவர்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்யுமாறு புத்தளம் சமூகத்தின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரிடம் அன்பாய் வேண்டுகின்றோம்.


இடம்பெயர்ந்த மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற பெயரில், புத்தளம் மக்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம் என்றும் சாணக்கியமாக பேசுகிறோம் என்று சொல்லி உண்மைக்கு புறம்பான தகவல்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்கவேண்டாம் என்றும் தயவாக வேண்டிக்கொள்கிறோம்.


SM Isham Marikar

சமூக ஆர்வலர் புத்தளம்

பாராளுமன்றத்தில் ஹக்கீம் தெரிவித்த கருத்து பிழையானது. பாராளுமன்றத்தில் ஹக்கீம் தெரிவித்த கருத்து பிழையானது. Reviewed by Madawala News on October 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.