மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.



(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு
 அரசாங்கம் தயாராகவுள்ளது.யாரிடம் ஆட்சியதிகரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது என இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.




வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் ஒரு சில தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறும் வகையில் ஒரு தீர்மானங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது.தேவையாயின் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படும்.ஒருபோதும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கமாட்டோம்.

மாகாண சபை தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை கிடையாது. தேர்தல் எந்நேரம் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்க்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது.யாருக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள்தீர் மானிப்பார்கள்.

மக்கள் எமக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துள்ளார்கள். ஜனநாயக ரீதியில் பிறிதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அரசாங்கம் ஜனநயாக கொள்கைக்கு மதிப்பளித்து செயற்படும். அரசியல் மட்டத்தில் முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த இரண்டு வருடகாலமாக முழு உலகமும் எவ்வாறான நிலையை எதிர்க் கொண்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில்மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் பொறுப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும்கொவிட-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. என்றார்.
மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. Reviewed by Madawala News on October 03, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.