மாகாண எல்லைகளை மீறி பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.. களை கட்டும் நுவரெலிய உட்பட சுற்றுலா தளங்கள்.



மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ள
நிலையில் இன்று (17) நுவரொலியா மாவட்டத்துக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்றுள்ளனா்.

இதேவேளை, எல்ல சுற்றுலா வலயத்துக்கும் அதிகளவான பயணிகள் சென்றுள்ளனா்.

இந்த வாரத்தில் சகல மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து செயற்பாடுகளை கடுமையாக பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸாா் நடவடிக்கை எடுத்திருந்தாலும் , இவ்வாறு மாகாண எல்லைகளை மீறி சுற்றுலா தளங்களுக்கு மக்கள் வருகைதந்துள்ளனா்.

வாகன இலக்கத்தகடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மேல்மாகாணத்தைச் சேர்ந்த பயணிகளே அதிகளவில் இவ்வாறு சென்றுள்ளமை தெரியவருகின்றது.

“மாகாண எல்லைகளை மீறி பயணித்த 306 வாகனங்களும், 783 பேரும் நேற்று (16) மீண்டும் எல்லைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். கொரோனா நிலைமையினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடகபேச்சாளா் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளா்ா.
மாகாண எல்லைகளை மீறி பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.. களை கட்டும் நுவரெலிய உட்பட சுற்றுலா தளங்கள். மாகாண எல்லைகளை மீறி பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.. களை கட்டும் நுவரெலிய உட்பட சுற்றுலா தளங்கள். Reviewed by Madawala News on October 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.