நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துறைமுகத்தில் 400 இற்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் இறக்குமதி..நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு துறைமுகத்தில் 400இற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கம் பறிமுதல் செய்யுமா என்பது குறித்து இலங்கை சுங்கம் நிதி அமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து, குறித்த வாகனங்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையானது சட்டவிரோதமானது எனவும் அந்த கடிதத்தில் இலங்கை சுங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கு சுமார் 300இற்கும் அதிகமான அதி சொகுசு வாகனங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பான் மற்றும் பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
siva ramasamy
நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துறைமுகத்தில் 400 இற்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் இறக்குமதி.. நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துறைமுகத்தில் 400 இற்கும் அதிகமான சொகுசு  வாகனங்கள் இறக்குமதி.. Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.