தெஹிவளை பாத்ய மாவத்தை விவகாரம்.. சந்தேக நபரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.நபர் ஒருவர் தெஹிவளை பாத்ய மாவத்தையில் உள்ள பள்ளிவாயலையும், அருகில் வீட்டில் இருந்த நபரையும் தாக்கிய சம்பவம் கடந்த வாரம் பதிவான நிலையில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.


அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர் ஆக்கப்பட்டார்.சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் பசன் வீரசிங்கம் ஆகியோர் முறைப்படு செய்தவர்கள் சார்பில் ஆஜராணார்கள்.

வழக்கறிஞர் ரஞ்சித் தஹநாயக்க மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான மற்ற நான்கு வழக்கறிஞர்கள் B-அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி பிணையில் விடுவிக்க நீதிமன்றத்தை நாடினர்.


இந்த சந்தேக நபர் முந்தைய காலங்களிலும் இவ்வாரான தவறான செயலைச் செய்துள்ளார் மற்றும் அவரது நோக்கமானது வெவ்வேறு மதங்களிடையே முரண்பாட்டை உருவாக்குவதாகும் என அவருக்கு எதிராக வாதாடப்பட்டது.


சந்தேக நபரின் நடத்தை அசாதாரணமானது என்பதால் அவரது உடலியல் அறிக்கையைப் பெற நீதிமன்றம் கோரியது.


குறிப்பிட்ட நபரை அக்டோபர் 25 ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்,


மேலும் அவரின் மனநிலை குறித்த விரிவான அறிக்கையைப் பெற சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தெஹிவளை பாத்ய மாவத்தை விவகாரம்.. சந்தேக நபரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. தெஹிவளை பாத்ய மாவத்தை விவகாரம்.. சந்தேக நபரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. Reviewed by Madawala News on October 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.