18 ஆயிரம் பட்டதாரிப் பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்.நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு
 சமூகமளிப்பதில்லையென அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில் 18 ஆயிரம் பட்டதாரிப் பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் அதன் எண்ணிக்கைக்கு அமைய பட்டதாரிப் பயிலுனர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து பட்டதாரிப் பயிலுனர்களுக்கும் மாகாண, வலயக் கல்விப் பணிமனைகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மாணவர் எண்ணிக்கை குறைவான பாடசாலைகளுக்கு ஐந்து பட்டதாரிகளும் அதனை விட கூடுதலான பாடசாலைகளுக்கு 10 பட்டதாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவண்ணம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ‘
தெரிவித்தார்.

Thamilan
Siva ramasamy
18 ஆயிரம் பட்டதாரிப் பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம். 18 ஆயிரம் பட்டதாரிப் பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம். Reviewed by Madawala News on October 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.