ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம்... காவல்துறை அதிரடி அறிவிப்பு.



நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள
நிலையில் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, வழங்கப்படும் அறிவுறுத்தல்களை ஏற்று அதற்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தினசரி ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கைது செய்யப்படுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற விசேட சோதனை நடவடிக்கையில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலை தொடருமானால் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகும் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம்... காவல்துறை அதிரடி அறிவிப்பு. ஊரடங்கு சட்டத்தை  மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம்... காவல்துறை அதிரடி அறிவிப்பு. Reviewed by Madawala News on September 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.