நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ; லொஹான் ரத்வத்த உறுதியுடன் தெரிவிப்பு.



ஆர்.யசி
அனுராதபுரம் சிறைக்கு சென்றதும் உண்மை, தமிழ்
 அரசியல் கைதிகளுடன் உரையாடியதும் உண்மை. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தேனே தவிர அவர்களை ஓருபோதும் அச்சுறுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை.


எனினும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மூலமாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சதித்திட்டமொன்று அரங்கேறியுள்ளது என இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.



தன்மீதான குற்றச்சாட்டை விசாரித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தத் தீர்மானமும் எடுக்க முடியும், ஆனால் நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் அவர் கூறினார்.



சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீதான பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் பக்க கருத்தை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார்.


அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எனக்கு வழங்கப்பட்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் 29 சிறைச்சாலைகளும், இரண்டு புனர்வாழ்வு மையங்களும் பொருப்பளிக்கப்பட்டிருந்தது.

தீப்பிடிக்கும் நிலையில் மிகவும் மோசமான கட்டத்தில் நான் இவற்றை பொறுப்பேற்றேன் என கூற முடியும். அவ்வாறான நிலையில் நான் பொறுப்பேற்ற பின்னர் நிலைமைகளை முழுமையாக சரிசெய்து சிறை கைதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்தது மட்டுமல்ல சிறை அதிகாரிகளின் கொள்ளை, குற்றச்செயல்களை முழுமையாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுத்தேன்.



ஒரு சில அதிகாரிகளை இடமாற்றினேன். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை நான் முன்னெடுத்த காரணத்தினால் திட்டமிட்ட சதித்திட்டத்தை முன்னெடுத்து எனக்கு எதிராக சதித்திட்டம் நிகழ்த்தி என்னை பழிவாங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும்.



இவர்கள் கூறுவதை போன்று எந்தவொரு குற்றமும் என்னால் இடம்பெறவில்லை.நான் சிறைக்கு சென்றது உண்மையே, அனுராதபுரம் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைக்கு சென்றேன், நான் எப்போதுமே சிறைகளை பார்வையிட செல்லும் வேளைகளில் முதலில் சிறை சமையலறைகே செல்வேன், சிறைக் கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகின்றதா என்பதையே முதலில் கவனிப்பேன்.


அன்றும் அவ்வாறே நான் சென்றேன், அதிகாரிகளையும் நான் கண்காணித்தேன். அன்று நான் சென்று சில பகுதிகளை பார்வையிட்டேன். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அவற்றையும் தாண்டி என்னால் எந்த குற்றமும் நிகழவில்லை. அதேபோல் நான் ஒரு பெண்ணுடன் சிறைக்கு சென்றதாக கூறுகின்றனர், ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை, அவ்வாறு என்னுடன் வந்ததாகக் கூறும் பெண் யார் என்றுகூட எனக்குத் தெரியாது.



இவ்வாறு நான் சென்றதற்கான ஆதாரங்கள் இருந்தால் முதலில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். முடிந்தால் அவற்றை வெளிப்படுத்துமாறு நானும் கேட்டுக்கொள்கின்றேன்.அதேபோல் குடிபோதையில் சிறைக்கு சென்றேன் என கூறுவதும் பொய்யான குற்றச்சாட்டாகும், நான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பதவியை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து ஒரு தடவையேனும் குடித்துவிட்டு சிறைகளுக்கு சென்றதில்லை.

அதுமட்டுமல்ல சிறைக்குள் செல்லும் வேளையில் ஆயுதங்களை கொண்டுசெல்ல முடியாது, கையடக்க தொலைபேசியைக்கூட கொண்டுசெல்ல முடியாது. அவ்வாறு இருந்தும் மிகப்பெரிய பொய்களை கூறி ஏன் இவ்வாறு செய்கின்றனர் என எனக்கும் விளங்கவில்லை. அதேபோல் அமைச்சுப்பதவியை துறக்க வேண்டும் என எனக்கு யாரும் வலியுறுத்தவில்லை.


ஊடகங்களில் எனக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் நலன் கருதி நானே சிந்தித்து அமைச்சுப்பதவியை துறக்க நடவடிக்கை எடுத்தேன். ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் ஒழுக்கமான சிறைக்கூடங்களை உருவாக்கி அரசாங்கத்திடம் கையளித்துவிட்டு நான் பதவி விலகினேன்.

நான் செய்த தவறுகளுக்காக அமைச்சுப்பதவியை துறந்ததாக கூறுவது பொய்யான விமர்சனமாகும். ஜெனிவா விவகாரங்கள் சென்றுகொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி அடுத்ததாக அமெரிக்கா செல்லவிருந்த நிலையிலும் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்பதற்காக நானாகவே இந்த தீர்மானம் எடுத்தேன்.

இந்த சூழ்ச்சி தமிழ் புலம்பெயர் தரப்புகளால் அரசாங்கத்திற்கு விடுத்த தாக்குதலாகவே இதனை நான் கருதுகின்றேன். என்னை இலக்குவைத்த
நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ; லொஹான் ரத்வத்த உறுதியுடன் தெரிவிப்பு. நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ; லொஹான் ரத்வத்த உறுதியுடன் தெரிவிப்பு. Reviewed by Madawala News on September 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.