வேனில் மோதி படுகாயமடைந்த நபரை அழைத்து சென்று காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்ற கொடூர சம்பவம். #புத்தளம்-ஆணமடுவ



(எம்.எப்.எம்.பஸீர்)
புத்தளம் ஆணமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 
கொட்டுகச்சிய பகுதியில், வேனில் மோதி படுகாயமடைந்த நபரை, அதே வேனில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்ற கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.



இந் நிலையில் சுமார் 6 மணி நேரத்துக்கு பின்னர் கட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நபர், மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணமடுவ - கொட்டுகச்சி - நீர்பாசன சந்தி பகுதியை சேர்ந்த 53 வயதான ஓய்வு பெற்ற இராணுவ வீரரான சரத் பண்டார அத்தபத்து என்பவரே இந்த கொடூர சம்பவத்துக்கு முகம் கொடுத்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய வேனின் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்ததாக பொலிசார் வீரகேசரியிடம் கூறினர்.

வயல் வேலைக்காக சென்ற, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீடு திரும்பிக் கொனண்டிருக்கையில் ஆணமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி வேகமாக பயணித்த வேன் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தை அடுத்து அப்பிரதேச மக்கள் வேனை சூழ்ந்துகொள்ளவே, சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு காயமடைந்த நபரை அழைத்து செல்வதாக கூறி, காயமடைந்தவரை வேனில் ஏற்றிக்கொண்டு சந்தேக நபர்கள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த நபரின் உறவினர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலைக்கு சென்று அங்கு அது தொடர்பில் விசாரித்த போது, அவ்வாறு எவரும்  சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து விடயம் புத்தளம் மற்றும் ஆணமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 விபத்தையடுத்து ஒன்று கூடிய பிரதேசவசிகளில் பெண் ஒருவர் குறித்த வேனை தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்திருந்த நிலையில், அவ்வேனின் இலக்கத் தகட்டை வைத்து ஆணமடுவ பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

அதன் பிரகாரம் குறித்த வேன் தொடர்பிலான விபரங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஊடாக திரட்டப்பட்டுள்ள நிலையில், வேனானது புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரினுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

பொலிசார் அந் நபரைக் கைது செய்து விசாரித்த போது, வேன் நண்பர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும், விபத்தொன்றினை அடுத்து நாளை வேனை சரி செய்து கொண்டு வந்து தருவதாக அவர்கள் கூறியதாகவும் உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். 

அவரது தகவல்களுக்கு அமைய நண்பர்களையும் கைது செய்த பொலிசார்,  அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, காயமடைந்தவரைக் கைவிட்டு சென்ற  காட்டுப் பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.

 அதன்படி குறித்த இடத்தை பொலிசார் அடையும் போதும் காயமடைந்த நபர் மிக கவலைக்கிடமாக இருந்துள்ள நிலையில், அவரை மீட்டு பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ. குமாரதாச, ஆணமடுவ பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  பிரசன்ன குமார அகையோரின் மேற்பார்வையில், ஆணமடுவ குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஜகத் குமார போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சமன் குமார  ஆகியோர் உள்ளடங்கிய சிறப்புக் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
வேனில் மோதி படுகாயமடைந்த நபரை அழைத்து சென்று காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்ற கொடூர சம்பவம். #புத்தளம்-ஆணமடுவ வேனில் மோதி படுகாயமடைந்த நபரை அழைத்து சென்று காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்ற கொடூர சம்பவம். #புத்தளம்-ஆணமடுவ Reviewed by Madawala News on September 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.