பௌத்த மதம், சிங்கள மொழி உட்பட 9 பாடங்களிலும் 9 A பெற்று சாதித்தார் மாணவி ஆயிஷா ஆமினா.



வெல்லவாய, மெல்வத்த தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் முஹம்மத்
 பாயிஸ் ஆயிஷா ஆமீனா என்ற முஸ்லிம் மாணவி இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 09 பாடங்களிலும் A சித்தியுடன் வெற்றிபெற்றுள்ளார்.

கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் குறித்த மாணவி பௌத்த மதம் பற்றிய பாடம் மற்றும் சிங்கள மொழிகளிலும் A சித்தி பெற்றுள்ளார். 

ஆயிஷா ஆமினாவின் தந்தை சைக்கில் திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கிறார்.

தனது வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆயிஷா “நான் முயற்சி செய்து படித்தேன். எனக்கொரு இலக்கு இருந்தது. ஜினாரத்ன தேரர் எனக்கு பௌத்த மத பாடம் கற்பித்தார். வகுப்பாசிரியர் சுபுன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் எனக்கு உதவியாக இருந்தார்கள். நான் சுதந்திரமாக கற்பதற்கு துணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி கூறுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம், சிங்கள மொழி உட்பட 9 பாடங்களிலும் 9 A பெற்று சாதித்தார் மாணவி ஆயிஷா ஆமினா. பௌத்த மதம், சிங்கள மொழி உட்பட 9 பாடங்களிலும் 9 A பெற்று சாதித்தார் மாணவி ஆயிஷா ஆமினா. Reviewed by Madawala News on September 26, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.