வெலிமடையில் புதிய Y M M A கிளை அங்குரார்ப்பணம் .


பதுளை வை எம் எம் ஏ யின் முன்னாள் தலைவரும் ஹாலி எல ப/ அல் இர்ஷாத் ம வி யின் பகுதித் தலைவருமான

எஸ் எம் நாசிம் ஆசிரியரின் முன் முயற்சியில் தேசிய வை எம் எம் ஏ யின் பொருளாளரும் பதுளை  வை எம் எம் ஏ யின் முன்னாள் தலைவருமான இஹ்ஷான் ஹமீத் மற்றும் தேசிய வை எம் எம் ஏ யின் பதுளை மாவட்ட இணைப்பாளருமான ஏ ஏ ஜுனைதீன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கடந்த  2021/07/24 ம் திகதி வெலிமடை முஸ்லிம் மா வி யில் வெலிமடை வை எம் எம் ஏ கிளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. 

கல்வியியலாளர்கள் புத்திஜீவிகள்,  சமூக  ஆர்வலர்கள் பலரின் பங்கேற்புடனும் சபையோரின் பேராதரவுடனும்  முதலாவது பொதுக் கூட்டம் இனிதே நடந்தேறியது. 

நடந்த முதலாவது போது கூட்டத்தில் அடுத்து வரும் ஓராண்டு காலத்துக்கான நிர்வாக கமிட்டி தெரிவு செய்யப் பட்டது. 

அதில் கிளைத் தலைவராக ஜனாப் எஸ் எம் நாசிம் ஆசிரியர் தெரிவு செய்யப் பட்டார். பொதுச் செயலாளராக வெலிமடை ப/ முஸ்லிம் ம வி யின் முன்னாள் அதிபர் ஜே எம் ஜாபர் அவர்கள் தெரிவு செய்யப் பட்டதுடன் பொருளாளராக பிரபல வர்த்தகர் எம் ஐ எம் இம்தியாஸ் ஹாஜி தெரிவு செய்யப் பட்டார். 

உதவித் தலைவராக பிரபல வர்த்தகர் நிசாம் மரைக்கார் அவர்கள் தெரிவு செய்யப் பட்டதுடன் உதவிச் செயலாளராக முன்னாள் ப/ வெலிமடை மு ம வியின் மற்றும் ப/ அல் அதான் மாவி ஆகிய பாடசாலைகளின் அதிபரும் வெலிமடை ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினருமான எம் மீரா அவர்கள் தெரிவு செய்யப் பட்டார்கள். கல்விச் குழு செயலாளராக வெலிமடை முஸ்லிம் ம வியின் அதிபர் ராசிக் பரீத் அவர்கள் தெரிவு செய்யப் பட்டார்கள். அத்துடன் சமய கலாசார குழு செயலாளராக ஜம்மியத்துல் உலமாவின் வேளிமடைக் கிளை தலைவரும் பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி அதிபருமான அஷ் ஷெய்கு  ஹிதயதுல்லாஹ் பஹ்மி அவர்கள் தெரிவு செய்யப் பட்டார்கள். சமூக சேவை பிரிவின் செயலாளராக ஜனாப் எம் அனூர் அவர்கள் தெரிவு செய்யப் பட்டார்கள். 



வெலிமடையில் புதிய Y M M A கிளை அங்குரார்ப்பணம் .  வெலிமடையில் புதிய Y M M A  கிளை அங்குரார்ப்பணம் . Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.